யு.என்.எச்.சி.ஆர் 39வது அமர்வில் வருகின்றன சிறீலங்கா தொடர்பில் இரு அறிக்கைகள்!

இலங்கை தொடர்பான, இரண்டு அறிக்கைகள், அடுத்த மாதம் நடைபெற விருக்கின்ற ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்படவுள்ளன.

எழுந்தமானமான தடுப்பு பற்றிய செயற்குழுவின் அறிக்கையும் உண்மை நீதி, பரிகாரம் வழங்கள், மீளவும் இவை நடக்காது என்ற உறுதி வழங்கல் என்பன தொடர்பிலான விசேட அறிக்கையாளரின் அறிக்கையும் இந்த அமர்வின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையின் 39ஆவது அமர்வு செப்டெம்பர் மாதம் 10 திகதியிருந்து செப்டெம்பர் 28 திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போதே, இலங்கை பற்றிய இரண்டு அறிக்கைகள் கலந்துரையாடப்படவுள்ளன.

கட்டாயத் தடுப்பு மீதான ஐ.நா செயற்குழு, கடந்த வருடம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பின்னர், இலங்கையிர் தனிநபர் சுதந்திரத்தை அனுபவிப்பதோடு, கணிசமான சவால்கள் உள்ளது எனவும் இது கட்டாயத் தடுப்புக்கு இட்டுச் சென்றுள்ளது எனவும் கூறியது.

நிபுணர்கள், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளையும் கண்டனர். இதில் ஐ.நா மனித உரிமைகள் பொறி முறைகளை கலந்துரையாடல் என்பது சித்திரவதைக்கு எதிரான சமவாயத்தில் ஒப்பமிட்டதும் அடங்கும்.

ஆயினும், மனித உரிமைகள் தேசிய வேலைத்திட்டம் 2017, 2018 தொடர்பில் இலங்கையின் கடப்பாட்டை நிறைவேற்ற அவசர நடவடிக்கை தேவை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தனிநபர் சுதந்திரத்துக்காக உரிமை சட்ட அமுலாக்கம் அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையாலும் சட்டதுறை அதிகாரிகளும் மதிக்கப்படாது உள்ளதென நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலை, திறந்தவெளி முகாம்கள், நெறிபிறழ்ந்தோர், முதியோர் இல்லங்கள், மனநோய் நிறுவனங்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றில் தனிநபர் சுதந்திரம் மறுக்கப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளார்.

அத்துமீறிய தடுத்துவைப்பு, தடுப்புக்கு எதிரான மாற்று இன்மை, காலங் கடந்த சட்டங்கள், ஒப்புதல் வாக்கு மூலத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் சீர்திருத்தங்கள் தேவையென நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிமன்றச் செயற்பாடுகள், அளவு கடந்த தாமதங்களால் பாதிக்கப்படுகின்றார்கள். சந்தேக நபர்கள் முடிவின்றி மறியலில் உள்ளமையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என எடுத்துக் கொள்ளல் இன்றும் பூரணமாக இல்லை எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments