டெனீஸிற்கு அமைச்சு வேண்டாம்: அச்சத்தில் அனந்தி!

பா.டெனீஸ்வரன் சாதாரண மாகாணசபை உறுப்பினராக இருந்தாலே மக்களிற்கு சேவையாற்ற முடியுமென மன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சராக இருந்த போது பந்தா காட்டுவதிலும் மக்களால் நெருங்கமுடியாத ஒருவராகவும் டெனீஸ்வரன் இருந்து வந்திருந்தார்.
அவர் வரும் போது ஜந்திற்கும் குறையாத கைத்தொலைபேசிகளுடனேயே வருவார். அதனை பரப்பி வைத்த பின்னர் கதைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அத்தொலைபேசிகளிற்கு வருகின்ற அழைப்புக்களிற்கு அரிதாகவே பதிலளிப்பார். இது தொடர்பிலும் உரையாட முடியாதிருப்பது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டிய போது ஸ்கைப் வழியே தன்னை அழைத்து உரையாட ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மக்களை சந்திப்பதுடன் வெட்டியாக சமூக ஊடகங்களில் கருத்திடுவது வரை அவரை வெறுமையாக்கியுள்ளது அமைச்சு பறிப்பு.

இந்நிலையில் வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவினை நிறுத்த வேண்டும் என சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலமைச்சர் உச்ச நீதிமன்றில்  வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த என்னை சட்ட விதிமுறைக்கு முரணாக முதலமைச்சர் நீக்கியமை செல்லாது எனவும் தொடர்ந்தும் தானே அமைச்சர் என உத்தரவிடக்கோரி வடக்கு மாகாண அமைச்சர்களில் ஒருவலான பா.டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கிற்கு இடைக்கால உத்தரவு வழங்கிய நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சர் என உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சர் என கடந்த 28ம் திகதியன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவினை இடைநிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் தரப்பில் தற்போது சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக உச்ச நீதிமன்றில் ஓர்  மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் டெனீஸ்வரனின் வழக்கு மீண்டும் நாளைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே டெனீஸ்வரனின் அமைச்சுக்களில் அதிமானவற்றினை வைத்திருக்கின்ற அனந்தி தற்போது கலக்கத்துடனேயே தனது அமைச்சினை தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments