இரவு முதல் விஷேட பாதுகாப்பு..!


காலி சர்வதேச மைதானத்திற்கு நேற்று இரவு முதல் விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு திடலின் கட்டிடம் அகற்றும் போது சில சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்ற நோக்கில் காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி பின்னதுவ பிரதேசத்தில் அதற்கான புதிய மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தயார் என கூறப்பட்ட போதும் அதற்கான எந்தவித செயற்பாடும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

காலி சர்வதேச விளையாட்டு திடலின் நிர்வாக அதிகாரம் மேல் மாகாண விளையாட்டு சங்கத்தின் செயலாளருமான அநுர வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மைதானத்தின் நிர்மாணப்பணிகள் இன்றைய தினம் பலவந்தமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னறிவித்தலின்றி அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments