விஜயகலா உரைக்கு மொழிபெயர்ப்புக் கேட்கிறது நீதிமன்று


விடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள, அங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு அரசாங்க மொழிபெயர்ப்பு திணைக்களத்துக்கு கோட்டு நீதிவான் நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் போது, விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சிங்கள அமைப்புகள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளுக்காக, விஜயகலா மகேஸ்வரனின் உரையின் சிங்கள, ஆங்கில மொழியாக்க வடிவங்களை சமர்ப்பிக்குமாறு கோட்டே நீதிவான் நேற்று அரச மொழிபெயர்ப்பு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான முன்னேற்றங்களை வரும் 20 ஆம் நாள் நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

No comments