விஜயகலா பேச்சில் தவறான அர்த்தம்:முதலமைச்சர் கவலை!



அந்நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது.புலிகள் திரும்பவும் வரவேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது இந்தப் பாதுகாப்புச்சூழலையே அன்றி வன்முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் விஜயகலா கூறவில்லை என வடமாகாண முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப்பிரிவு முதலமைச்சரிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளார்கள். இதுபற்றி விபரிக்கையில் விஜயகலா பேசிய கூட்டத்தில் நானும் பங்கேற்றபடியால் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். மத்திய அமைச்சர்கள் வஜிரஅபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினார்கள். விஜயகலாவின் பேச்சில் இடம்பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றி எனது கருத்தைக்கேட்டார்கள்.

தனது கட்சிக்கு விசுவாசமாகவே இது காறும் அவர் நடந்துவந்துள்ளார்.அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றேன்.

 அவருக்கு எதிராகநடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகுமெனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

No comments