அதிகாரமேயில்லாத நிலையில் ஆலோசனையா?


முதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளமை கேலிக்குரியதாகியிருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா உறுப்பினர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்யவேண்டும். டெனீஸ்வரனை நான் பதவி நீக்கம் செய்ததை அரசவர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம். அதாவது 2017 ஆகஸ்ட் 20ந் திகதி தொடக்கம் பயன்பாட்டிற்குவரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவிய விதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டி மேன்முறையீட்டுத் தீர்மானத்தைப்புறம் வைக்கலாமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

No comments