படுகொலைக்கு நீதி இலுப்பைக்குளத்தில் மக்கள் போராட்டம்!


இலுப்பைக்குளத்தில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட இராசரெத்தினம் பிரபு வின் கொலையை கண்டித்து நீதிவிசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்குற்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 28ம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

சிறுப்பிட்டிகிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33வயதுடைய குடும்பஸ்தர் அதிகாலை 4.00மணியளவில் கல் அரியும் வேலைக்கு சென்றபோது காணாமல் போயிருந்தார். அன்றைய தினம் காலை 10.00மணியளவில் குறித்தநபர் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.அவர் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் இலுப்பைக்குளம் கன்னியா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் போலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார், மோப்பநாய் உதவியுடன் ஊர்மக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர், எனினும் பொழுது சென்றமையினால் காலையில் தொடரலாம் எனக்கூறி போலிஸார் சென்றிருந்தனர். எனினும் இரவு 7.30மணியளவில் ஆடுமேய்க்க சென்ற ஒருவரின் தகவலை அடுத்து நீர்நிலை ஒன்றில் குறித்தநபரின் சடலம் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சடலத்தை மீட்டிருந்தனர்.

குறித்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தக்கோரியுமே இன்று இலுப்பைக்குளத்தில் மக்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

கைக்குழந்தையுடன் கொல்லப்பட்ட இளைஞரது மனைவியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments