வடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு!


வடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சாதகமாக பரிசீலிக்கலாமென அக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் அடுத்த தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலேயே தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போட்டியிட வேண்டுமென்பதே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் நிலைப்பாடாகும்.அண்மையில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியப்படுமென தெரியவில்லை.இந்நிலையில் முதலமைச்சர் புதிய கட்சியிலோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தோ தேர்தல் களத்தில் குதித்தால் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமெக அவர் மேலும் தெரிவித்தார்.

முதலமைச்சரது பாதை சரியாக இருப்பதால் தான் நாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவேண்டியிருக்கின்றது.

2001 முதல் 2015 வரையில் வடக்கில் 50 இற்கும் அதிகமான விழுக்காடு வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 35 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கையே பெறமுடிந்தது.இது தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையினை இழந்தமையே காரணமென அவர் மேலும் தெரிவித்தார்.குறிப்பாக கூட்டமைப்பின் பங்காளிகட்சி தலைவர்கள் தமது கடமையை சரிவரச்செய்யாமையே இதற்கு காரணமெனவும் அவை தெரிவித்தன.

No comments