வடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடையே  பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “கவனமாகச் சென்று வாருங்கள்” எனும் போக்குவரத்துப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், அண்மைக் காலமாக சடுதியாக அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (12) நடைபெற்றது.
இதன் போது யாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.இதற்கு காவல்துறையினர் அசண்டையீனமும் காரணமாகும்.
வடக்கிலுள்ள காவல்துறையினர் வருமானம் பார்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்துள்ள அவர் வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

No comments