முதலமைச்சர் பொய் கூறவில்லை:சீ.வீ.கே

மாகாண அமைச்சர்கள் 3 பேர் தொடர்பான தனக்கு கடிதம் கிடைக்கவில்லை. என முதலமை ச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறிய கருத்து உண்மையானது. அவர் பொய் கூறவில்லை, சபைக்கு பொறுப்புகூறும் கடமையிலிருந்து அவர் தவறவில்லையென வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வட மாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.  எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் ஆழுங்கட்சிக்குள் உள்ள இருவரின் ஒருவர் அப்பட்டமான பொய்யை 
கூறிக்கொண்டிருக்கிறார்கள் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலை வர் சி.தவராசா இங்கே இப்படி பொய்தான் கூறப்படுகிறது. என கூறியதுடன் கடந்த அமர்வு க்கு முதல் நடைபெற்ற அமர்வில் முதலமைச்சர் ஆளுநரிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் 
கிடைக்கவில்லை. என கூறிய கருத்து பொய்யானது என்பதை நிரூபித்ததாக கூறினார். இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடந்த அமர்வுக்கு முதல் அமர்வில் அதாவ து 126வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் 
முதலமைச்சரை நோக்கி 3 அமைச்சர்கள் விடயம் குறித்து ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறினார். அதனை முதலமைச்சர் நிராகரித்து அவ்வாறன கடிதம் தமக்கு வரவில்லை என கூறினார். 

அது உண்மை. முதலமைச்சருக்கு 3 அமைச்சர்கள் விடயம் 
குறித்து கடிதம் அனுப்பபடவில்லை. ஆகவே முதலமைச்சர் பொய் கூறவில்லை. பொறுப்புகூறும் கடமையிலிருந்து தவறவில்லை. என கூறினார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அவை தலைவருடைய கருத்து சமாளிப்பதாக இருப்பதாக கூறியதுடன், 
அவை தலைவருடைய அந்த கருத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறினார்

No comments