தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

இதேவேளை தமிழீழ தேசியத்தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. 

வல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

No comments