நீலிக்கண்ணீருடன் வருகின்றது நல்லாட்சி கும்பல்!


இலங்கை அரசை ஜநாவில் காப்பாற்றிக்கொண்டிருக்கின்ற கும்பலொன்று மறுபுறம் 500 வது நாளை தாண்டி நீடிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களிற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டமொன்றை நேற்று மாலையில் நடத்தியுள்ளது.

தற்போதைய ரணில் -மைத்திரி அரசிற்கு ஜநாவில் கால அவகாசமொன்றை பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்படுகின்ற நிமல்கா பெர்னாண்டோ தரப்பினை சேர்ந்த முன்னாள் ஊடகப்போராளி சுனந்த தேசப்பிரிய போன்றோரும் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அதேபோன்று 2017ம் ஆண்டில் ஜநாவில் இலங்கைக்கு கால அவகாசம் கோருகின்ற தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து போலியான அறிக்கையினை தயாரிப்பதில் முன்னின்ற மரிசா டி சில்வா உள்ளிட்ட தரப்புக்கள் தற்போது 500 நாள் தாண்டியும் இந்த அரசினால் கண்டுகொள்ளப்படாது வீதியோரங்களில் அநாததரவாக கைவிடப்பட்டுள்ள குடும்பங்களிற்கு கண்ணீர் விட தயாராகின்றன.

குறித்த தரப்புக்கள் நல்லாட்சி அரசில் தமது பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் மேம்பட்டிருப்பதுடன் பதவிளையும் பெற்றுள்ளன.காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதியாக தற்போது நிமல்கா பெர்னான்டோ போன்றோர் உள்ளனர்.
எனினும் தெற்கில் மஹிந்த தரப்பின் மீள் எழுச்சி மற்றும் தமிழ் மக்களின் மைத்திரி –ரணில் அரசின் மீதான நம்பிக்கையிழப்பினையடுத்து இக்கும்பல் மீண்டும் ஆதரவு கடைவிரிக்கத்தொடங்கியுள்ளன.
இதனிடையே கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்ட களத்திற்கு சென்றிருந்து சுனந்த தேசப்பிரிய போன்றவர்கள் போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களால் விரட்டப்பட்ட சம்பவம் ஆண்டின் முற்பகுதியில் நடந்திருந்தமையினை தமிழ் தரப்புக்கள் நினைவு கூர்ந்துள்ளன.

No comments