சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 01.07.2018 மற்றும் 08.07.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் லுர்சேன் மாநிலங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளுடன், விளையாட்டுத்துறைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும்இ  தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும்இ விளையாட்டு ஆர்வலர்களும்; பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற பல பிரிவுகளில் அனைத்து விதமான போட்டிகளும்; நடைபெற்றதுடன் 27வது மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கொடிகள் அனைத்தும் இறக்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாக நிறைவடைந்தன.

இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கழகங்கள், கழக வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட
துடுப்பாட்டச் சுற்றுபோட்டிகளின் முடிவுகள் 03.07.2016

09 வயதுப்பிரிவு

1ம் இடம்
தமிழ் ஸ்போர்ட்டிங் விளையாட்டுக் கழகம்
2ம் இடம்
வானவில் விளையாட்டுக்கழகம்;                 
3ம் இடம்
நீலப்பபறவைகள்  விளையாட்டுக் கழகம்                             

11 வயதுப்பிரிவு

1ம் இடம்
நீலப்பபறவைகள்  விளையாட்டுக் கழகம்
2ம் இடம்
வானவில் விளையாட்டுக்கழகம்  
3ம் இடம்
இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம்                         


13 வயதுப்பிரிவு

1ம் இடம்
ஓஸ்கா விளையாட்டுக்கழகம்                     
2ம் இடம்
சிற்ரி போய்ஸ் விளையாட்டுக் கழகம்
3ம் இடம்
இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம்                         

15 வயதுப்பிரிவு

1ம் இடம்
தமிழ் யுத் விளையாட்டுக் கழகம்           
2ம் இடம்
ஒஸ்கா விளையாட்டுக் கழகம்                             
3ம் இடம்
வானவில் விளையாட்டுக்கழகம்

17 வயதுப்பிரிவு

1ம் இடம்
ஒஸ்கா விளையாட்டுக் கழகம்
2ம் இடம்
யங்பேட்ஸ் விளையாட்டுக்கழகம்           
3ம் இடம்
நீலப்பபறவைகள்  விளையாட்டுக் கழகம்                     

வளர்ந்தோர்பிரிவு

1ம் இடம்
யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகம்    
2ம் இடம்
தாய்மண்  விளையாட்டுக் கழகம்                   
3ம் இடம்
நடேஸ்வரா விளையாட்டுக் கழகம்.               

கரப்பந்தாட்டம் ஆண்கள் (5 பேர்)

1ம் இடம்
சூரிக் விளையாட்டுக் கழகம்
2ம் இடம்
nஐhலிபோஸ் விளையாட்டுக் கழகம்


மென்பந்து துடுப்பாட்டம்

1ம் இடம்
அல்ப்ஸ் ஒ1 விளையாட்டுக் கழகம்    
2ம் இடம்
இளம் புலிகள்  விளையாட்டுக் கழகம்                   
3ம் இடம்
nஐhலிஸ்ரார் விளையாட்டுக் கழகம்.           
  No comments