வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி!

வடமாகாண கல்வி அமைச்சினால் எதிர் வரும் 01ம் திகதி புதன் கிழமை நடைபெற இருந்த வலிகாமம் கல்வி வலயத்திற்கான அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக ரீதியிலான குறைகளைத்தீர்க்கும் நடமாடும் சேவையும்,அதிபர்களுக்கான செயலமர்வும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இது  எதிர் வரும் 04ம் திகதி சனி காலை 09.00 மணி தொடக்கம் வலிகாமம் கல்வி வலயத்தில் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண கல்வி வலயங்கள் அனைத்தினதும் பாடசாலை அதிபர்களுக்கான செலமர்வும், நடமாடும் சேவையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments