ஆவாக் குழுக்களுடன் ஆமிக்கு தொடர்பில்லையாம் !


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் போதைப் பொருட்களின் கடத்தலின் பின்புலத்தில் இராணுவத்தினரே உள்ளதாக குற்றஞசாட்டப்பட்டுவரும் நிலையில் அவற்றிற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கம் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தின் பின்புலத்தில் தான் யாழில் வன்முறைச்சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. வன்முறையாளர்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதில் இராணுவச் சிப்பாய்களுக்கு பங்கிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.

யாழ்ப்பாணத்தின் கடலோரங்களில் இராணுவம் முகாம்களை அமைத்து இலங்கைக்குள் சட்டவிரோதிகள் உள்நுளையாது பார்த்துவரும் நிலையில் கஞ்சாக்கள் கடல்வழியாக எவ்வாறு யாழ்ப்பாணத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வியும் எழுந்துவருகிறது.

இந்நிலையிலேயே இதனை மறுத்த கட்டளைத்தளபதி,

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவ்வாறான குழுக்களுக்கு உடந்தையாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகின்றதே தவிர புதிதாக வடக்கிற்கு படையினர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை - என்றார்.

No comments