தியாகி பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “தமிழpன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்” தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.


நன்றி
வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்

No comments