மன்னாரில் மக்களை விரட்டியடிக்கும் புழுதிப் புயல்!

மன்னார் மவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீசிக் கொண்டிருக்கும் அதீத காற்றின் காரணமாக பாரிய அளவில் மண்கள் மற்றும் தூசுகள் வாரி அள்ளப்பட்டு புழுதி புயலாக வீசி வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடல் மற்றும் காற்றின் வேகம் கடந்த சில மாதங்கலாக அதிகமாக இருப்பதனால் தென் பகுதி கடலானது அலையின் வேகம் காரணமாக பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.
மறு பக்கம் காற்றின் வேகம் காரணமாக கடல் ஓரப்பகுதிகளில் உள்ள மண்கள் பாரிய அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தூக்கி எறியப்படுகின்றது. மன்னார் மாவட்டம் முழுதும் புழுதிப் புயலின் தாக்கம் காணப்பட்டாலும் மக்கள் அதிகமாக வாழும் சில கரையோர பகுதிகளான சாந்திபுரம் சௌத்பார் தாழ்வுபாடு போன்ற பகுதிகளிலும் எமில்நகர் பனங்கட்டுகொட்டு ஜிம்ரோன்நகர் ஜீவபுரம் போன்ற பகுதிகளிலும் இப் புழுதிப் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.
குறிப்பாக பாடசலை மாணவர்கள் மற்றும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளும் அதிக சிரமங்களை எதிர் கொள்கின்றனர் எதிரில் வரும் வாகனம் கூட கண்ணில் புலப்படாத அளவிற்கு காற்றின் வேகத்தின் காரணமாக புழுதிப்புயல் வீசி வருகின்றது காற்றில் எடுத்து வரப்படுகின்ற புழுதி மண் தூசு சிறு கற்கள் கண்ணுள் செல்வதனால் கண் வருத்தம் கண் வீக்கம் போன்ற கண் சம்மந்தப்பட்ட பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட வாய்புகள் காணப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த காரணத்தால் குறித்த பிரதேசத்து மக்கள் வெளி பயணங்களை குறைத்து வீட்டுக்குள் முடங்கி காணப்படுகின்றனர்
குறிப்பாக மாலை நேரங்களில் புழுதி புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் வீடுகளுக்குள் தூசுக்கள் அள்ளி வீசப்படுவதன் காரணமாக வீடுகளின் கதவுகளை கூட திறக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

No comments