கருணாவின் தம்பிக்கு விசாரணை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராகவிருந்த விமல்ராஜ் அவர்களின் பதவி பறிதாக்கப்பட்டு அவர் கொழும்பிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணி முறைகேடுகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரனின் வீட்டிற்கு சென்று அவரை அச்சுறுத்தியமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களின் பின்னனியில் இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவரது நிருவாகத்தின் கீழ் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களும் வெளிமாவட்டங்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

குறித்த விமல்ராஜ் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூா்த்தி முரளிதரன் பிரதியமைச்சராகவிருந்த காலத்தில் 2012 ம் ஆண்டின் நடுப்பகுதியில் விசேட அமைச்சரவை பத்திர அனுமதியினூடாக மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ( LRC) பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட பல LRC காணிகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதான விமர்சனங்கள் எழத்தொடங்கியிருந்தது

அதாவது கிரான்குளம், செங்கலடி வாகரை, கிரான், போன்ற இடங்களில் இருந்த LRC காணிகள் பல முறையற்ற விதத்தில் கைமாற்றப்பட்டு விற்பனை செய்வதாக பொது மக்களும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்தன.

இதே வேளையில் இவரின் பின்னனியில் அரசியல் வாதிகள் சிலரும் முன்னாள் அரசாங்க அதிபர் அவர்களும் பக்கபலமாக செயற்பட்டதனால் இவர் தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டு வந்தார்.
Sponsored Content
Mgid

தளவாய் பிரதேசத்தில் இருந்த பல ஏக்கர் அரச காணிகள் முஸ்லீம் தலைமைகளினால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இவர் மீது எழுந்த அழுத்தத்தின் பின்னர் அவர்கள் மீது வழக்கு தொடுத்திருந்தார். இதன் பின்னணியில் இவரி மீது திட்டமிடப்பட்ட துப்பாக்கி சூடு ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது

அதன் பின்புலத்தில் பல சந்தேகங்கள் நிலவி வந்த வேளையில் அரசாங்க அதிபருக்கான இடமாற்றம் இடம்பெற்றதும்

இவர்மீதான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் வலுப்பெற்றது.

அவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரன் அவர்கள் இவர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டினை அனைத்து ஊடகங்கள் மூலமும் வெளிக்காட்டி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சின் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் முறையிட்டதற்கு அமைவாக இவருக்கான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த விமல்ராஜ் அவர்கள் அலுவலக நாளில் பாராளுமன்ற உறுப்பினர் யோகஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவி மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட பொலிசார் இருவருடனும் சென்று பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்ட வேளையில் யோகஸ்வரனின் மெய்பாதுகாவலர் காயமடைந்துடன் குறித்த பிரச்சனை பாராளுமன்றம் வரை சென்றிருந்தது.

அதன் காரணமாக இவருக்கு விசாரணையின் பேரில் கொழும்பிற்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தினை 
நீதி மன்ற உத்தரவினைப்பெற்று இடைநிறுத்தி தான் மட்டக்களப்பினை விட்டுச் செல்லமாட்டேன் என கூறியிருந்த நிலையில் தற்போது பதவியிலிருந்தே தூக்கப்பட்டுள்ளாா்.

2014 ஆண்டு வெள்ள நிவாரண பொருட்கள் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்ட போது இவர் தனது வாகனத்தை பயன்படுத்தி குறித்த முறை கேட்டில் பங்குதாரராக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருனா அம்மானின் இணைப்பு செயலாளராகவிருந்த பொன் ரவீந்திரனும் இவரும் சேர்ந்து முன்னாள் அரச அதிபரின் துணையுடன் பல காணி மோசடிகளைச் செய்துள்ளனர்.

இவர் மீதான விசாரணைகள் தொடருமாகவிருந்தால் மட்டக்களப்பில் நடைபெற்ற காணி ஊழல்கள் அதற்கு துணை நின்ற பல நபர்கள் குறித்த இரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

No comments