அழித்த மரங்களை படையினரே நாட்டட்டும்:முதலமைச்சர்!


வடமாகாணசபையினால் மரநடுகை திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் நிச்சயம் அதில இராணுவத்தை இணைத்துக்கொள்ளமாட்டோமென முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் முற்றவெளியில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை நிகழ்வில் படையினரது பிரசன்னத்தில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் முதலமைச்சர் பங்கெடுத்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

யாழ்.மாநகரசபையின் இறுதியாக நடைபெற்றிருந்த அமர்வில்; இராணுவத்தை மாநகரசபை நிகழ்வுகளில் இணைத்துக்கொள்வதில்லையென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.ஆனால் அதனை தாண்டி இன்று படையினரது பிரசன்னத்தில் அதிலும் அவர்களது பங்களிப்பில் மரநடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வடமாகாண முதலமைச்சர்,ஆளுநர்,அமைச்சர்கள் ,மாநகர முதல்வர் என பலரும் பங்கெடுத்திருந்த நிகழ்வு தொடர்பாகவே ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆளுநரே படையினரை கொண்டுவந்திருந்தார்.இதனை புறக்கணிப்பதன் மூலம் எம்மக்களிற்கு கிடைக்கும் சில பலன்கள் கிட்டாது போய்விடுமென கருதியே நானும் பங்கெடுக்கவேண்டியதாயிற்று.

ஆனாலும் வடமாகாணசபை நிகழ்வை முன்னெடுக்குமாயின் நிச்சயமாக படையினரை இணைத்துக்கொள்ளாதென தெரிவித்த முதலமைச்சர் மறுபக்கம் எமது மரங்களை அழித்த படையினர் மீள அதனை நாட்டித்தரவேண்டிய கடமையிருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை படைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட மரநடுகை திட்டம் பல்வேறு தமிழ் உணர்வாளர்களிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.  

No comments