பலிகொள்ளப்பட்டது காட்டுப்புலி!



கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று அடித்துக்கொல்லப்பட்டுள்ளது.அது காட்டிலிருந்து மக்கள் குடியிருப்பில் புகுந்து பத்துப் பேரைத் தாக்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.அவர்கள் சிறுத்தையினை பிடிப்பதற்கான முன்னேற்பாடுகள் ஏதுமின்றியே வந்திருந்தனர்.

மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர். இதற்கிடையில் எட்டுப் பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத்திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

ஒரு கட்டத்தில் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் பொது மக்கள் அதனை பொல்லுகளால் தாக்கியதில்; குறித்த சிறுத்தை அவ்விடத்திலேயே பலியாகியுள்ளது.

No comments