மாநகரசபை உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வேண்டுமாம் - புளொட் தர்சானந் பிரேரணைமக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் வாகன வசதி வழங்க முடியுமானல் நாங்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே எங்களுக்கும் வாகன வசதி தாருங்கள் என கேள்வி எழுப்பியிருக்கும்  யாழ்ப்பாணம் மாநகரசபையின் புளொட் உறுப்பினரான ப.தர்சானந் இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கோரும் பிரேரணை ஒன்றுக்கான முன்மொழிவினை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பிரேரணை யாழ் மாநகரசபையின் நாளைய (22) அமர்வின்போது சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பிரேரணையில் பிரதி முதல்வருக்கான வாகன வசதி, நிலையியற் குழுக்களின் தலைவர்களுக்கான வாகன வசதி, உறுப்பினர்களுக்கான வாகன வசதி என வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமக்கு ஏன் வாகனவசதி தரவேண்டும் என்பதை நியாயப்படுத்தி  நாளைய (22) அமர்வில் புளொட் உறுப்பினர் தர்சானந் சிறப்புரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments