வடக்கின் கடல்வளம் வடக்கு மக்களுக்கானதே



வடமாகாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை வளங்களை வடமாகாணத்தை சேர்ந்த மீனவர்களே பயன்படுத்த வேண்டும் என யாழ். வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வணிகர் கழகம்அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில், வடமாகாணத்தில்உள்ள தீவுப்பகுதிகள் உட்பட, கடற்ரையோரங்களில் இனம் காணப்பட்ட சில இடங்களை நீர்வாழ் உயிரினவளர்ப்புக்கலான இடங்களாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சினால் இனங்காணப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த இடங்களை எமது வடமாகணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும், வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவசங்கங்களின் சமாசங்கள் மற்றும் ஆர்வமுள்ளோரும் பயன்படுத்தவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கொழும்பில் உள்ள சில மூதலீட்டாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சிடம் அனுமதியை பெற்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட முயல்கின்றனர் . இதுஇவை தமிழர்களிற்குரிய வளங்கள் வளங்கள், அத்துடன் இது எமது பிரதேசத்தைச் சேர்ந்த இடங்கள். ஆகையால் எமது மக்கள் இதனை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டக்கொள்வதுடன், இதற்கான விண்ணப்பங்களை நீங்கள் தெரிவு செய்து இடங்களை குறிப்பிட்டு கடற்றொழில் நீரியல்துறை அமைச்சிடமும் துறை அமைச்சிடமும் மாகாண அமைச்சிடமும்; விரைவாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

இத்திட்டத்தில் மூலம் எமது பிரதேச வளங்களை பயன்படுத்தும் கிராம மட்ட பொருநாதாரம் உயர்வடைவதுடன், எமது மாகாணமும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments