மாகாணசபைத் தேர்தலை பிற்போட முதலமைச்சர் விதித்த நிபந்தனை



மாகாணசபையைக் கலைத்து ஆளுநரிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்காது தமது பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிற்போடுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் வரும் ஒக்ரோபர் மாதம் முடிவடையவுள்ளது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர்,

“அடுத்த தேர்தல் வரை தற்போதைய மாகாண சபையின் பதவிக்காலத்தை நீடிப்புச் செய்து, மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், தேர்தலைப் பிற்போடுவதன் மூலம், ஆளுனரின் கையில் வடக்கு மாகாண சபையை ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடுவேன்.

ஆளுனரின் கையில் மாகாண சபையைக் கொடுப்பதென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை.

அங்கு அதிகாரப் பகிர்வு கிடையாது. மத்திய அரசாங்கமே எல்லாவற்றையும் செய்து கொள்ளும்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments