காவல்துறை போதாது:அதிரடிப்படை வேண்டுமாம் அனந்திக்கு?


மாணவி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட காட்டுப்புலம் - பாண்டவெட்டைக்கு போதிய காவல்துறையினரின் பாதுகாப்பு இன்மையால் தான் செல்லமுடியாதிருப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் ஆபத்தானவர்கள் வசிக்கின்றனர். அங்கு கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, தவறணைக்குக் கொடுக்காமல் கள்ளு விற்பனை என்பன இடம்பெறுகின்றன. அங்கு தனியாகச் செல்ல முடியாது. எனக்கு இரு காவல்துறையினர் தான் பாதுகாப்புக்குத்தரப்பட்டுள்ளனர்.

ரெஜினா கொல்லப்பட்டமைக்கு அந்தச் சமூகம்தான் காரணம். இராணுவத்தால் ரெஜினா கொல்லப்பட்டால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன். ஆனால் அங்குள்ள ஒருவரால்தான் அச்சிறுமி கொல்லப்பட்டார்.அதனால் தான் தான் அங்கு சென்றிருக்கவில்லையெனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமது கிராமத்திற்கு அனந்தி வந்தால் செருப்படி தான் மிச்சமென கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.இதனால் பதுங்கிக்கொண்ட அனந்தியை ஊடகங்கள் பொது வெளிக்கு கொண்டுவந்துள்ளன.

இந்நிலையிலேயே தனக்கு வாக்களித்த மக்களிடம் செல்ல காவல்துறை பாதுகாப்பில்லையென அனந்தி புதுவிளக்கமளித்துள்ளார்.

No comments