சூறையாடப்படும் இல்மனைட் மண்! தடுத்து நிறுத்தக் கோரிக்கை!

வெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய சூழல் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அவர் மேலும் குறிப்படுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் பகுதிகளில் இல்மனைட் போன்ற கனிய வளங்களை சூறையாடி வருகின்றது.

இதனால் அப் பகுதிகளில் பாரிய அனர்த்தங்கள் உருவாகும் நிலைமை உருவாகியுள்ளது. கடலோர கனிய வளங்கள‍ை அகழும்போது இன்னுமொரு சுனாமி ஏற்படுமாயின் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.

அத்துடன் இவ்வாறான நடவடிக்கையின் காரணமாக மீன்பிடி, சுற்றுலாத்துறைகள் பாதிக்கப்படுவதுடன் மரம், செடி, கொடிகளும் இதனால் அழிந்து போகும்.

ஆகவே இது தொடர்பில் ஜனாதிபதி உரிய அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments