புஷ் மீது காலணி வீசியவர் ஈராக் அதிபர் தேர்தலில் போட்டி!

முன்னாள் அமொிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மீது 2008ஆம் ஆண்டு காலணி வீசிய பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி எதிர்வரும் ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மண்டேசர் அல்-ஷைதி புஷ் மீது காலணி வீசியபோது புஷ் குனிந்ததால் குறித்த தாக்குதலிருந்து தப்பினார். இதன் பின்னர் ஈராக்கில் நடைபெறும் எல்லா சீரழிவுக்கும் புஷ் தான் காரணம்  அதனால் தான் புஷ் மீது காலணி வீசினேன் என பத்திரிகையாளர் மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

அல்-ஷைதிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை கிடைத்த போதும் சிறையில் அவரின் நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் விடுதலையானார். புஷ் மீது காலணி வீசிய பத்திரிகையாளரான அல்-ஷைதிக்கு பெருவாரியான ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடக்க உள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

அவர் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சாத்ர் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள அல்-ஸஷதி, அவரின் முதன்மைச் கோசமாக “திருட்டு அரசியல்வாதிகளை சிறையில் தள்ளுவதுதான் எனது இலக்கு. அப்போதுதான் நாடு வளம் பெறும்” என்பதை முன்வைத்தே தேர்தலில் களமிறங்குகிறார் அல்-ஷைதி. தெரிவித்துள்ளார்.

No comments