பிரித்தானியாவில் 1500 மருத்துவ நியமனங்கள் இரத்து! கணனி கோளாறே தவறுக்கு காரணம்!

பிரித்தானியாவில் 24 மருத்துவப் பிரிவுகளுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 1500 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வு மூலம் தொிவான மருத்துவர்களுக்கு கணனிகளில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக அதிக மதிப்பெண்கள் கிடைத்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கே இவ்வாறு 1500 மருத்துவர்கள் நியமனம் பெற்றிருந்தனர்.

கணனியிலிருந்து மற்றொரு கணனிக்கு தேர்வு குறித்த தேர்வு குறித்த தகவல்கள் மாற்றும் போதே கோளாறுகள் ஏற்பட்டதாக தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இளநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனால் தெரிவான மருத்துவர்கள்  குறித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சொந்த ஊரை விட்டுவிட்டு பணி ஒதுக்கப்பட்ட ஊருக்கு சென்று வீடு பார்த்து, குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்த்த பின்னர் வேலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது மிக வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

பண ரீதியிலும், மன ரீதியிலும் மருத்துவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம் இதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என பிரிட்டன் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

No comments