துாத்துக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி யாழ் பல்கலையில் கவனயீா்ப்பு!


இந்தியா துாத்துக்குடியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டொ்லைட் ஆலையை உடனடியாக மூடுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். துாத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி கடந்த வாரம் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டார்கள்.
இதன்போது 13 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் துாத்துக்குடி படுகொலைக்கு எதிராக ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்தியா- தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெ ட் ஆலையை மூடகோரி போராட்டம் நடாத்திவரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடாத்தியுள்ளனர். இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ்.பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ஸ்ரெட்லைட் ஆலையினை மூடக்கோரி பதாகைகளை தாங்கியவாறு புரட்சி பாடல்கள் மற்றும் தமிழீழ புரட்சி பாடல்களை ஒலிக்கவிட்டு போராட்டம் நடத்தினார்கள்

No comments