காணாமல் போனோர் உறவுகளிடம், காணாமல் போனோர் அலுவலகம் முன்வைத்துள்ள கோரிக்கை


காணாமல் போனோர் விடயத்தில் நீதிவழங்கும் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெறும் வரையில், காணாமல் போனோரது உறவினர்கள் பொறுமைக் காக்க வேண்டும் என்று கௌரவத்துடன் கோருவதாக, காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் முதல் காணாமல் போனோர் அலுவலகம் மாவட்ட ரீதியான விஜயங்களை மேற்கொண்டு, காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளது.

காணாமல் போனோரை கண்டறியும் நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய கட்டமாகும்.

காணாமல் போனோரது உறவினர்களது நீண்டகால ஆதங்கத்தின் நியாயத்தை இந்த அலுவலகம் புரிந்துக் கொண்டுள்ளது.

எனினும் செயற்பாடுகள் அனைத்தும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவை வினைத்திறனாக அமைவதற்கு, மக்கள் பொறுமை காப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த அலுவலகமானது எதிர்வரும் வாரங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ளது.

No comments