4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி


இந்த ஆண்டில் முதல் நான்கு ஆண்டுகளில், 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அனைத்துலக வணிக மற்றும் முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1.9 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்தன. இது நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிகமாகும். இந்த ஆண்டு, 2.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரும் ஜூன் மாதம், 2.75 பில்லியன் டொலர் முதலீட்டிலான இரண்டு இயற்கை எரிவாயு மின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்கள் கட்டுமானப்பணிகள் முடிந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில ஆண்டுகளாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments