இன்றிரவு முடிவை அறிவிக்கிறது கூட்டமைப்பு!


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில், தமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற முடிவை இன்றிரவு அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போதே, இன்றிரவு தமது முடிவை அறிவிப்பதாக இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments