விடுதலைப்புலிகளின் க.வே.பாலகுமாரன் அவர்களின் மகளின் திருமண நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்றது


விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகளின் திருமண நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
க.வே.பாலகுமாரனின் மகள் மகிழினியின் திருமணத்தில், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். க.வே.பாலகுமாரன் ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலத்தில் பசீர் சேகுதாவூத் அவருடன் இணைந்து பணியாற்றியவராவர். அதேவேளை, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான க.வே.பாலகுமாரனும் அவரது மகன் சூரியதீபனும் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments