கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் தாய் மீதும் வாள்வெட்டு

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் 3ஆம் கண்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பட்டப்பகலில் உந்துருளியில் வந்த குழு வீடு புகுந்து நடன ஆசிரியரின் தலை முடியைப் பிடித்து கொடுமைப்படுத்தியதின் பின் வெட்டியுள்ளனர். மகளைத் தடுக்க தாயாரும் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மகளும் தாயும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டுக்கு இலக்கான ஆசிரியர் கிளிநொச்சி தர்மபுரம் பாடசாலையில் பணியாற்றுகின்றார்.
வாள் வெட்டில் ஈடுபட்ட குழுவை காவல்துறையினர் சி.சி.ரி.வி பதிவுக் காணொளியை வைத்து தேடி வருகின்றனர்.

Post a Comment