அனுமாரின் மறுபிறவி! சிறுவனைக் கும்பிட்டுச் செல்லும் மக்கள்!

இந்தியாவில் கடவுள் அனுமனின் மறுபிறவி எனக் கருதி 13 வயது சிறுவனை அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் தொட்டு கும்பிட்டுச் செல்கின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனுக்குப் முதுகெலும்பில் நீண்டகாலமாக வால் போன்று முடி வளர்ந்து வந்துள்ளது. இதைக் கண்ட அக்கிராம மக்கள் அனைவரும் சிறுவன் அனுமனின் மறுபிறவி என்று கூறியுள்ளனர்.

இஸ்லாமியச் சிறுவனாக இருந்தாலும், அங்கிருக்கும் கிராம மக்கள் சிலர் சிறுவனிடம் வந்து தினந்தோறும் ஆசிர்வாதம் வாங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. சிறுவனைப் பார்க்க வரும் மக்கள் வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்றவைகளை காணிக்கையாக கொடுப்பார்கள் எனவும், அவர்களுக்குச் சிறுவன் ஆசிர்வாதம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகின் பின்னால் சுமார் ஒன்றரை அடி நீளத்திற்கு வால் போன்று முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. மருத்துவர்களோ நரம்பு குழாய் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் அவரது குடும்பத்தினர் இது குறித்து எந்த ஒரு கவலையும் படாமல், அதை நீக்குவது குறித்து எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தங்கள் மகனை மக்கள் கடவுளாகப் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், இந்து மக்கள் கடவுளை எப்படி வணங்குவார்கள் என்பது தெரியும். இது அவனுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று கூறியுள்ளனர்.


No comments