இன்று ரணில், நாளை மைத்திரி! எவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியும்! சம்பந்தன் நாடாளுமன்றில் உரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலொன்றுக்கு அமைவாக கொண்டுவரப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட காலத்தை அவதானிக்கும் போது அது அரசியல் நிகழ்ச்சி நிரல் என்பது புலப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்தது ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவருவார்கள். கூட்டு எதிர்கட்சியினரின் இலக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் இந்நிலையில் எவ்வாறு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

No comments