ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் பிரித்தானியா உள்துறை அமைச்சர்!

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் (home secretary) ஆம்பர் ரூட் (Amber Rudd) பதவி விலகியுள்ளார்.

இவரது பதவி விலகல் கடித்தை பிரித்தானியாப் பிரதமர் தெரசா மே (Theresa May) அவர்களிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியிருந்தார்.  இந்நிலையில் இவரது பதவி விலகல் கடிதத்தை தெரசா மே ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கொன்சவேட்டிக் கட்சியின் பிரதமர் தெரசா மே (Theresa May) தலைமையிலான அரசாங்கத்தில் ஆம்பா ரூட் (Amber Rudd) உள்துறை அமைச்சராக (home secretary) பதவி வகித்து வந்தார்.

அண்மைக் காலத்தில் இவர் மீது பிரித்தானியாவின் எதிர்க் கட்சிகள் இவர் மீது ஊழல் புகார்களை முன்வைத்தனர்.

பிரித்தானியாவில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட் (Amber Rudd) தனது பதவியில் இருந்து நேற்று விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments