கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு 3 அல்லது 4 வாரங்களில் டிரம்ப் அறிவிப்பு

வட கொரிய தலைவரான கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் நடைபெறும் என கருதுகிறேன் என அமொிக்க அதிபர் டொனால்ட டிரம்ப் கூறியுள்ளார்.

மிச்சிகன் மாகாணம், வாஷிங்டன் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உயைாற்றும் போதே டொனால்ட டிரம்ப் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடச் செய்வதில் இச்சந்திப்பு முக்கியமாக அமையும் என்றார் டிரம்ப்.

இதேநேரம் நேற்று முன்தினம் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''இப்போதுதான் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் நீண்ட நேரம் பேசினேன். அது நல்லதொரு உரையாடல். எல்லா காரியங்களும் நல்லவிதமாக நடந்து வருகின்றன. வடகொரிய தலைவருடனான சந்திப்புக்கான இடமும், நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments