காவிரி விவகாரம் - தி.மு.க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..!


காவிரி மேலாண்மை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்தகட்டமாக மெரினா கடற்கரையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மத்திய அரசுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மத்திய அரசு ஆளும் அ.தி.மு.க அரசின் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டமானது தொடங்கியுள்ளது. மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதச் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு காவிரி தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்

No comments