சுங்கச்சாவடி மைய கண்ணாடி அடித்து, உடைப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 


கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில், அங்கு நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி மையத்தின் கண்ணா டிகள் அடித்து உடைக்கப்பட்டன.

 மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments