போராட்டக்களமாக மாறுவதை தடுக்க சென்னை முழுவதும் உஷார் நிலையில் போலீஸ்

சென்னை போராட்டக்களமாக மாறுவதை தடுக்க நகரம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவிரிக்காக போராட்டம் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் இணை ஆணையர் அன்பு பேட்டி மெரினா கடற்கரையில் அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாகுபாடின்றி எந்தவிதமான போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. போராட்டம் நடத்த விரும்புவோர் சென்னையில் போராட்டம் நடத்துவதற்கென காவல்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை குறிப்பிட்டு, மனு சமர்ப்பித்தால், அதை காவல்துறை பரிசீலித்து அனுமதி அளிக்கும். எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் கூடி, இடையூறு செய்யவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments