பல்கலைக்கழகக் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் போராட்டம் முடிய வில்லை. கடிதம் ஒன்றைப் பரிமாறுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட் டது.
10 வீத சம்பள அதிகரிப்புக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட அனைத்துப் பல்கலைக்கழக சங்கங்களின் சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டபோதும் அவற்றை 2020 ஆம் ஆண்டுவரை எந்த அடிப்படையில் கொள்கை தயாரிப்பது என்பது பற்றிய பேச்சு நேற்று இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது.
சம்பள அதிகரிப்புப் பற்றிய பரிந்துரைக் கடிதம் உயர் கல்வி அமைச்சரால் திறைசேரிக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால் சம்பளம் வழங்கப்படுவது பற்றிய சுற்றறிக்கையை திறைசேரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கும்.
உயர் கல்வி அமைச்சர் அந்தக் கடித்தில் கையெழுத்திடவேண்டும். ஆனால் அரசியல் குழப்பங்களால் அவர் சிறிகொத்தாவில் உள்ளார். அதனாலேயே கையெழுத்துப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கடிதம் கிடைக்கும்வரை தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று ஊழியர் சங்கம் தெரிவித்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நடத்தும் 3 நாள்கள் கொண்ட கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. அதற்கு அவசர உதவிகளை மட்டும் ஊழியர்கள் வழங்குவர் என்றும் சங்கம் தெரிவித்தது.
Post a Comment