புற்றுநோயினால் மற்றொரு முன்னாள் போராளி மரணம்!

புற்றுநோயினால் மற்றுமொரு முன்னாள் போராளி மரணமடைந்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் இரண்டாம் கண்டம் வலதுகரையினை சேர்ந்த சந்திரசேகரம் பிரதீபன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை காணப்பட்டது. புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி நிலையில் மிகுந்த வறுமைகோட்டின் கீழ் சுயதொழில் செய்துவந்தார்.
அத்துடன் முன்னாள் போராளி புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுதலைஆவதற்கான சிசிச்சைகளை யாழ்ப்பாணம் ,கொழும்பு போன்ற இடங்களில் எடுத்துவந்துள்ள நிலையில் நேற்று (29-04-2018) உயிரிழந்துள்ளார்.

அண்மை நாட்களில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளான நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளதை உணர்ந்த அவர் தனது நோயினை மாற்றுவதற்கான உதவிகளை பல்வேறு நபர்களிடம் கேரிக்கை விடுத்துவந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களில் புனர்வாழ்வின் பின்னர் சில போராளிகள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களாலும் மர்மமாகவும் மரணமடைந்து வரும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் சந்திரசேகரம் பிரதீபனின் மரணம் முல்லைத்தீவை மாத்திரமின்றி வடக்கு கிழக்கையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments