தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை


சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம எச்சரித்துள்ளார்.
ஹொரணை – பௌபிட்டிய பகுதியில் உள்ள றப்பர் தொழிற்சாலையில் விசவாயு கசிவினால் 5 பேர் மரணிக்க நேர்ந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறித்த தொழிற்சாலையானது சூழல்பாதுகாப்பு தொடர்பில் போதிய அவதானம் செலுத்தி இருக்காததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது.
சூழல்பாதுகாப்புக்கான அனுமதிபத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் தொழிற்சாலைகள், அதில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
எதிர்காலத்தில் இந்த நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

No comments