முரண்பாட்டு நிலைமை குறித்து விசாரணை.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 5 விரிவுரையாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட  குழு, அடுத்தவாரம் முதல் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில், காவல்துறையினருக்கும் தாம் விளக்கமளித்ததாகவும், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

குறிப்பாக புத்தர்சிலை வைப்பதற்கான உலோக சட்டத்தை ஸ்தாபிக்க இடமளிக்க முடியாது என்ற தமது நிலைப்பாட்டையும் காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து வளாக சபையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் வளாக முதல்வர் தெரிவித்தார்

No comments