இம்மாத இறுதி வரை கடும் வெப்பம் தொடரும்!


இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் வெப்பமான காலநிலை அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்தது. எனினும், நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு நோய் தொற்றும் வாய்ப்புள்ளதால் அதிகமாக நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments