தசரதனின் இறப்புக்கு ஒரு கூனிதான் காரணம்


தசரதச் சக்கரவர்த்தி தன் மூத்த மகன் இரா மனுக்கு பட்டாபிஷேகம் செய்யத் தீர்மானிக் கின்றார்.தான் ஆரோக்கியமாக இருக்கும்போதே தன் மகனிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை தசரதனி டம் இருந்துள்ளது என்பதும் இதனூடு தெளி வாகிறது. பட்டாபிஷேகத்துக்கான அத்தனை ஏற்பாடு களும் நடந்தாயிற்று. அயோத்தி மாநகர மக்கள் ஆனந்தக் களிப் புடன் பட்டாபிஷேகத்தைக் காண்பதற்காக காத் திருக்கின்றனர். என்னே கொடுமை! கைகேயின் தோழி மந் தரை எனும் கூனி தன் சூழ்ச்சியை ஆரம்பிக் கின்றாள். பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட வேண்டும் எனத் தசரதனிடம் கேட்குமாறு கைகேயியைத் தூண்டுகின்றாள். இராமன் மீது அளவு கடந்த அன்பு கொண்ட கைகேயி கூனியின் உபதேசத்தால் மனம் மாறி, இராமனைக் காடாளும்படியும் பரதனை நாடாளும்படியும் உத்தரவிடுமாறு தசரதனிடம் வரமாக வேண்டுகின்றார். ஏலவே கொடுத்த இரண்டு வரங்களையும் நிறைவேற்றுவதற்காக இராமன் 14 ஆண்டு கள் காடாளவும் பரதன் நாடாளும்படியும் உத் தரவிடுகின்றார் தசரதன். தந்தையின் உத்தரவை கைகேயி வாயி லாக கேட்ட இராமன்; சீதை, இலட்சுமணன் ஆகியோருடன் காடேகிறார். பட்டாபிஷேகம் நடக்க இருந்த இராமன் தன் மனையாளுடன் காடு சென்றார் என்ற செய்தி அறிந்த தசரதனின் உயிர் பிரிந்து போகிறது. என்ன செய்வது இராமனை பெற்ற தந்தை; கோசலை, சுமத்திரை ஆகிய நன்மாதரை மனைவியாகக் கொண்ட கணவன்; தீங்கறியா நாட்டு மக்கள்; வசிட்டர் உள் ளிட்ட பிரம்மரி´களின் வாசம் என எல்லாம் இருந்த அந்த அரண்மனையில்தான் கூனி யும் இருந்தாள். எல்லோரையும் நல்லவர்களாகப் பார்த்த தசரதருக்கு கூனியின் கபடத்தனம் தெரியா மல் போயிற்று. இங்குதான் இரண்டு விடயங்கள் கவனிக் கப்பட வேண்டும். அதில் ஒன்று நல்லவர்களை அறிவதுபோல தீயவர்களையும் அறிந்திருப் பது அவசியம். மற்றையது தீயவர்களை, அண்டல் போடு பவர்களை, கோள் கொண்டு வருபவர்களை வைத்திருந்தால் அதனால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும் என்பதுடன் நல்லவர் களை இழந்தால் தன்னையும் இழக்க நேரிடும் என்பதாகும். ஆக, தசரதனின் இறப்பு என்ற நிகழ்வில் இருந்து மேற்போந்த இரண்டு விடயங்களை யும் நாம் உணர்ந்து கொள்வதுதான் புத்தி சாலித்தனமாகும்.

No comments