இறுதி தீர்மானம் இன்னும் சில மணி நேரங்களில்


பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானத்தை இன்று முற்பகல் 10.00 மணி அளவில் மேற்கொள்ளவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலே ஒழிய, பொருளாதார மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளுக்கும் தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் நேற்று தாம் ஜனாதிபதியை சந்தித்த போது, 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுலாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments