அமெரிக்க சிறையில் உணவு திருடியருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

அமொிக்காவில் டெக்காசிலுள்ள சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலையில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவை திருடி விற்பனை செய்த ஊழியர் ஒருவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் சீர்திருத்த சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து ''பாஜிடாஸ் (fajitas)'' (மெக்சிக்கோ மக்களின் பாரம்பரிய உணவு) என்ற உணவுகள் எடுப்பது வழங்கம். வாகனத்தில் வரும் இவ்வுணவை சிறைச்சாலையில் பணியாற்றும் ஊழியரான கில்பெர்டோ எஸ்காமில்லா (53) (Gilberto Escamilla ) என்பவர் திருடி வெளியில் விற்பனை செய்துள்ளார். இதன மூலம் இவர் 1.2 மில்லின் அமெரிக்க டொலரை சாம்பாதித்துள்ளார். ஒருநாள் இவர் உணவு திருடும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பாக வழங்கியுள்ளார்.

No comments