11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - இரு கடற்படையினருக்கு விளக்கமறியல்!


கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படையினரை தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். கஸ்தூரிகே காமி மற்றும் முத்துவாஹென்னதி அருண துஷார மெண்டிஸ் ஆகிய கடற்படையினரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கில் சம்பத் முனசிங்க, கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் கொமடோர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய்களான லக்ஷ்மன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மவிட்ட இஹலகெதர தர்மதாச, ராஜபக்ச பத்திரனலாகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

No comments