விடுதலைப் புலிகளை மீள அமைக்கும் முயற்சி! நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ண குமார், சுபாஷ்கரன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகிய நால்வருக்குமே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு தலா 10 வருட சிறைத்தண்டனையும், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஏ.கயல்விழி தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நால்வருக்கும் தலா 45,000 ரூபா (இந்திய நாணயம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

"2015ம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, கிருஷ்ணகுமார், இராஜேந்திரன் மற்றும் சசிக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய சுபாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடமிருந்து 4 ஜி.பி.எஸ் கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நால்வரும் சென்னை புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

No comments